முகப்பு
வணிகம்

இறக்கத்தில் பங்குச் சந்தை: 3 நாள்களில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிவு

வங்கி மற்றும் ஐடி பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

Updated On : 20 ஜனவரி, 2022 at 4:48 PM
இறக்கத்தில் பங்குச் சந்தை: 3 நாள்களில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிவு
பகிர்:

வங்கி மற்றும் ஐடி பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் வீழ்ச்சியால்  தொடர் இறக்கத்தை அடைந்துள்ளது.

நேற்று(ஜன.19) 60,098.82 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,045.48 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 634.20 புள்ளிகளை இழந்து 59,464.62 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

Advertisement

அதேபோல், 17,938.40 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,921.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 181.40  புள்ளிகள் சரிந்து 17,757.00 புள்ளிகளில் நிலைபெற்றது.

மேலும், சென்செக்ஸ் கடந்த 3 நாள்களில் 1,800 புள்ளிகளை இழந்து வர்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.