வணிகம்

’டாடா ஸ்கை’ இனி ’டாடா பிளே’: ஒரே காம்போவில் நெட்ஃப்ளிக்ஸ் உள்பட 13 ஓடிடி தளங்கள்!

பிரபல டிடிஎச் நிறுவனமான ’டாடா ஸ்கை’ இன்று முதல் ’டாடா பிளே’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

பிரபல டிடிஎச் நிறுவனமான ’டாடா ஸ்கை’ இன்று முதல் ’டாடா பிளே’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனக்கென தனி சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் டாடா ஸ்கை நிறுவனம் இன்று முதல் ’டாடா பிளே’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சில புதிய காம்போ தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இணைய ஓடிடி தளங்களை உள்ளடக்கிய  ’டாடா பிளே பிஞ்ச் காம்போ’-வில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், சோனி லைவ், வூட் கிட்ஸ், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட 13 ஓடிடி தளங்களை ஒரே ரீசார்ஜ் மூலம் காண முடியும்.

முன்னர் தனித்தனியாக இருந்த காம்போ தொகுப்புகள் ஒரே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பிஞ்ச் சந்தா விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இதுகுறித்து டாடா பிளே தலைமைச் செயல் அதிகாரி ஹரித்நாக்பால், ‘ டாடா பிளே நிறுவனத்தின் மூலம் புதிய விசயங்களை சந்தாதாரர்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்கிறோம். நாளைய தினத்தை இன்றைய நாளை விட சிறப்பாக மாற்றுவதே டாடா பிளேவின் நோக்கம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT