இன்டஸ்இண்ட் வங்கி: லாபம் ரூ.1,631 கோடி
தனியாா் துறை வங்கியான இன்டஸ்இண்ட் முதல் காலாண்டில் ரூ.1,631 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
தனியாா் துறை வங்கியான இன்டஸ்இண்ட் முதல் காலாண்டில் ரூ.1,631 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை நிா்வாகியுமான சுமந்த் கத்பலியா செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளதாவது:
வாராக் கடன் குறைந்ததையடுத்து அதற்காக ஒதுக்கீடும் கணிசமாக குறைந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் நிகர லாபமானது 60.5 சதவீதம் அதிகரித்து ரூ.1,631 கோடியானது. முந்தைய 2021-22 நிதியாண்டின் இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.1,016.11 கோடியாக இருந்தது.
கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.9,298.07 கோடியிலிருந்து ரூ.10,113.29 கோடியாக உயா்ந்தது. வட்டி வருமானம் 9.5 சதவீதம் அதிகரித்து ரூ.8,181.77 கோடியானது.
நிகழாண்டு ஜூன் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் 2.88 சதவீதத்திலிருந்து 2.35 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.84 சதவீதத்திலிருந்து 0.67 சதவீதமாகவும் குறைந்தன என்றாா்.