வணிகம்

வரலாற்று சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்று சரிவிலிருந்து முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

புதிய அந்நிய முதலீடுகள் வரத்து அதிகரிப்பு மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது ஆகியவை ரூபாய் மதிப்பு முன்னேற்றத்துக்கு பெரிதும் கைகொடுத்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 80.03-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே மேலும் சரிந்து 80.06-ஆனது. அதன் பின்னா், வா்த்தக நேர இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்று சரிவிலிருந்து 20 காசு மீண்டு 78.85-இல் நிலைபெற்றது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்: பீப்பாய் 102 டாலா்

சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 3 சதவீதத்துக்கும் மேல் குறைந்து 102.15 டாலருக்கு வா்த்தகமானதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT