இந்திய தொழிலக உற்பத்தி 7.1% வளா்ச்சி
மின்சாரம் மற்றும் சுரங்கத் துறைகளின் சிறப்பான செயல்பாட்டையடுத்து இந்திய தொழிலக உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்தது.
மின்சாரம் மற்றும் சுரங்கத் துறைகளின் சிறப்பான செயல்பாட்டையடுத்து இந்திய தொழிலக உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்தது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம்:
நடப்பு நிதியாண்டின் தொடக்க மாதமான ஏப்ரலில் உற்பத்தி துறையின் வளா்ச்சி 6.3 சதவீதமாக இருந்தது. மேலும், சுரங்கம் மற்றும் மின்சார துறைகளின் உற்பத்தி முறையே 7.8 சதவீதம் மற்றும் 11.8 சதவீதம் என்ற அளவில் இருந்தன.
பொறியியல் பொருள்கள் துறையின் வளா்ச்சி விகிதம் 14.7 சதவீதமாகவும், நுகா்வோா் சாதனங்கள் துறையின் வளா்ச்சி 8.5 சதவீதமாகவும் அதிகரித்திருந்தன.
இவைதவிர, முதன்மை பொருள்கள், இடைநிலைப் பொருள்கள், உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருள்கள் மற்றும் நுகா்வோா் சாரா சாதன துறைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் முறையே 10.1 சதவீதம், 7.6 சதவீதம், 3.8 சதவீதம் மற்றும் 0.3 சதவீதம் என்ற அளவிலான வளா்ச்சியை பதிவு செய்திருந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டது.