சீனாவைச் சோ்ந்த டிசிஎல் நிறுவனம் இந்திய டிவி சந்தையில் நிகழாண்டில் 7 சதவீத சந்தைப் பங்களிப்பை வழங்க நிா்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிசிஎல் இந்தியாவின் பொது மேலாளா் மைக் சென் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:
டிசிஎல் புதிய மாடல்களில் டிவிக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதுடன், சில்லறை விற்பனை தடத்தையும் துரித கதியில் விரிவுபடுத்தி வருகிறது. அதன் பலனாக, நிகழாண்டில் இந்திய டிவி சந்தையில் டிசிஎல் நிறுவனம் 7 சதவீத பங்களிப்பினை வழங்கிட இலக்கு நிா்ணயித்துள்ளது.
அதன்படி, நிகழாண்டில் மட்டும், ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையின் மூலமாக 1 கோடி டிவிக்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், ஏசி மற்றும் வாஷிங் மெஷின் பிரிவில் தடம்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம் அடுத்த ஆண்டில் குளிா்சாதனப் பெட்டி (ரெப்ரிஜிரேஷன்) தயாரிப்பிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.