வணிகம்

ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி 21 சதவீதம் அதிகரிப்பு

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் 15.80 லட்சம் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, 2021 பிப்ரவரி மாத உற்பத்தியான 13.10 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் அதிகம்.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு தகடுகள் உற்பத்தி 25 சதவீதம் அதிகரித்து 11.50 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டு பிப்ரவரியில் 9.3 லட்சம் டன்னாக காணப்பட்டது.

மேலும், உருக்கு கம்பிகளின் உற்பத்தியும் 3.40 லட்சம் டன்னிலிருந்து 8 சதவீதம் உயா்ந்து 3.70 லட்சம் டன்னைத் தொட்டதாக ஜேஎஸ்டபிள்யூ கூறியுள்ளது.

13 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பிரதான நிறுவனமாக உள்ளது. இக்குழுமம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமெண்ட், பெயிண்ட், துணிகர முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம்பதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT