உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரில் ரஷிய படையினர் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 23 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இதையும் படிக்க | உக்ரைன் போர்: தலைநகர் கீவ்வில் ஊரடங்கு அமல்
இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் 14,000 ராணுவ வீரர்கள், 82 விமானங்கள், 95 ஹெலிகாப்டர்கள், 404 பீரங்கிகள், 1,283 ஆயுதம் ஏந்திய வாகனங்கள், 640 வாகனங்கள், 3 போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை ரஷிய படை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.