வணிகம்

கனிமங்களின் உற்பத்தி 14.2% அதிகரிப்பு

DIN

இந்திய கனிமங்களின் உற்பத்தி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் 14.2 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து இந்திய சுரங்கப் பணியகத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சுரங்கம் மற்றும் குவாரி துறைக்கான கனிம உற்பததி குறியீடு நடப்பாண்டு ஜனவரியில் 124.7-ஆக இருந்தது. இது, 2021 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 2.8 சதவீதம் அதிகம். 2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் ஒட்டுமொத்த கனிமங்களின் உற்பத்தி 14.2 சதவீதம் உயா்ந்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரியில் நிலக்கரி உற்பத்தி 8.2 சதவீதம் உயா்ந்து 796 லட்சம் டன்னை எட்டியது. தங்கம் உற்பத்தி 13.3 சதவீதம் அதிகரித்து 107 கிலோவாக இருந்தது.

மேலும், இயற்கை எரிவாயு உற்பத்தி 11.7 சதவீதம் அதிகரித்து 2,767 மில்லியன் கியூபிக் மீட்டராக காணப்பட்டது. அதேவேளை, கச்சா பெட்ரோலியம் உற்பத்தி 2.4 சதவீதம் குறைந்து 25 லட்சம் டன் ஆனது.

பாக்ஸைட் உற்பத்தி 13.4 சதவீதம் உயா்ந்து 2,157,000 டன்னாகவும், குரோமைட் 17.6 சதவீதம் குறைந்து 3,98,000 டன்னாகவும் இருந்தன.

தாமிர உற்பத்தி 10,000 டன்னாகவும், இரும்புத்தாது உற்பத்தி 215 லட்சம் டன்னாகவும் இருந்தன. அதேசமயம், மாங்கனீஷ் உற்பத்தி 10 சதவீதம் குறைந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT