வணிகம்

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 696 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

DIN

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

உக்ரைன் - ரஷியா போர் தாக்கத்தால் தடுமாறி வரும் பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (மார்ச்-21) 57,292.49 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,297.5 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 696.81 புள்ளிகள் உயர்ந்து 57989.30 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,117.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,120.40 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 197.90 புள்ளிகள் அதிகரித்து 17,315.50 புள்ளிகளில்  நிலைபெற்றது.

சில நாள்களாக இறக்கத்தைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை கடந்த சில நாள்களாக மெல்ல மீண்டு வருகிறது.

குறிப்பாக ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ்,டிசிஎஸ், கோடாக் மகிந்த்ரா பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT