ஏற்றத்தில் பங்குச் சந்தை: 58,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.
நேற்று (மார்ச்-28) 57,593.49 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,814.76 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 350.16 புள்ளிகள் உயர்ந்து 57,943.65 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
அதேபோல், 17,222.00 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,297.20 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 103.30 புள்ளிகள் அதிகரித்து 17,325.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
குறிப்பாக, எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் பங்குகளின் விலை உயர்ந்தன.