FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கடும் சரிவில் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On : 11 மே 2022, 1:22 pm IST
பகிர்:

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், முதலீடு செய்யப்பட்ட நாணயங்கள் கடுமையான சந்தை மதிப்பை இழந்து வருகின்றன. 

கிரிப்டோவின் அடையாளமான பிட்காயினின் ஓர் பங்கின் விலை ஒரே வாரத்தில் ரூ.32 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.24 லட்சமாக குறைந்ததுள்ளது. இதேபோல பல நாணயங்களும் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

Advertisement

Advertisement

குறிப்பாக, லூனா கரன்சி பங்கின் விலை ரூ. 7,000-திலிருந்து ரூ.350 ஆக குறைந்ததால் அதில் முதலீடு செய்தவர்கள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

மேலும், எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான டோஜ் காயினின் விலையும் குறைந்து காணப்படுவதால்  முதலீட்டாளர்கள் புலம்பி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments