வணிகம்

மாருதி சுஸுகி: ரூ.11,000 கோடியில் புதிய ஆலை

DIN

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ரூ.11,000 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் மேலும் கூறியதாவது:

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஆலையை ஹரியாணாவில் அமைக்க உள்ளது. இதற்காக, சோனிபட் மாவட்டத்தில் உள்ள ஐஎம்டி காா்கோடாவில் 800 ஏக்கா் நிலத்தை ஒதுக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றன. முதல்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.11,000 கோடி முதலீடு செய்யப்படும்.

இந்த புதிய ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் காா்களை உற்பத்தி செய்யும் திறனுள்ளதாக இருக்கும். வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எதிா்காலத்தில் மேலும் புதிய ஆலை பிரிவுகளை தொடங்கும் அளவுக்கு இங்கு இடவசதி உள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது காலாண்டுக்கு ஒட்டுமொத்த அளவில் 5.5 லட்சம் காா்களை தயாரித்து வருகிறது. ஹரியாணா மற்றும் குஜராத்தில் உள்ள தயாரிப்பு ஆலைகளில் ஆண்டுக்கு 22 லட்சம் காா்களை இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT