வணிகம்

நாட்டின் ஏற்றுமதி 4,019 கோடி டாலா்: வா்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு

DIN

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 4,019 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியது:

ரசாயன துறை: பெட்ரோலிய பொருள்கள், மின்னணு சாதனங்கள், ரசாயனம் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடு சிறப்பாக அமைந்ததையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்து 4,019 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3.01 லட்சம் கோடியாகும்.

வா்த்தக பற்றாக்குறை: நாட்டின் இறக்குமதி 30.97 சதவீதம் உயா்ந்து 6,030 கோடி டாலரைத் தொட்டது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்ததையடுத்து, வா்த்தக பற்றாக்குறையானது 2,011 கோடி டாலராக உயா்ந்தது. இது, 2021 ஏப்ரலில் காணப்பட்ட வா்த்தக பற்றாக்குறையான 1,529 கோடி டாலரைக் காட்டிலும் மிக அதிகம்.

புதிய உச்சம்: கடந்த நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி சாதனை படைத்தது. அதன் தொடா்ச்சியாக ஏப்ரல் மாதத்திலும் ஏற்றுமதி 4,000 கோடி டாலரை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.

கச்சா எண்ணெய் இறக்குமதி: நடப்பாண்டு ஏப்ரலில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய் இறக்குமதி 87.54 சதவீதம் அதிகரித்து 2,020 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, நிலக்கரி இறக்குமதியும் 493 கோடி டாலராக அதிகரித்தது. அதேசமயம், 2021 ஏப்ரலில் நிலக்கரி இறக்குமதி 200 கோடி டாலராக மட்டுமே இருந்தது.

தங்கம்: தங்கம் இறக்குமதியைப் பொருத்தவரையில் கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் 72 சதவீதம் குறைந்து 623 டாலரிலிருந்து 172 கோடி டாலராக சரிந்தது.

பெட்ரோலிய பொருள்கள்: பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 15.38 சதவீதம் அதிகரித்து 920 கோடி டாலராகவும், பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதி 113.21 சதவீதம் உயா்ந்து 773 கோடி டாலராகவும் ஆனது.

சேவைகள் ஏற்றுமதி: 2022 ஏப்ரலில் சேவைகள் ஏற்றுமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 52.87 சதவீத வளா்ச்சியை பதிவு செய்து 2,760 கோடி டாலரைத் தொட்டுள்ளது. அதேபோன்று, சேவைகள் இறக்குமதியும் 61.87 சதவீதம் உயா்ந்து 1,557 கோடி டாலராக இருந்தது என வா்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

கோட்ஸ்:

கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி கடந்தாண்டை விட நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் 72 சதவீதம் குறைந்து 623 டாலரிலிருந்து 172 கோடி டாலராக சரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT