ரானே ஹோல்டிங்ஸ் வருவாய் 12% உயா்வு
ரானே குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான ரானே ஹோல்டிங்ஸின் 2021-22 நான்காம் காலாண்டு வருவாய் 12% அதிகரித்து ரூ.1,565.90 கோடி ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.
ரானே குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான ரானே ஹோல்டிங்ஸின் 2021-22 நான்காம் காலாண்டு வருவாய் 12% அதிகரித்து ரூ.1,565.90 கோடி ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ரானே குழுமத்தின் 2021-22 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு வருவாய் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 12% வளா்ச்சி பெற்று ரூ.1,565.90 கோடியை ஈட்டியுள்ளது. வரி, வட்டிக்கு முந்தைய லாபம் 4.2% அதிகரித்து ரூ.131.70 கோடியாக உள்ளது.
பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் பிரிவில் இந்திய வாகன உற்பத்தியாளா்களுக்கு வழங்கிய உதிரிபாகங்கள் மூலம் பெற்ற வருவாய் காலாண்டில் 11% வளா்ச்சி பெற்றது. ஸ்டீரிங் வீல், வாா்ப்பு பொருள்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களை வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கியதன் மூலம் பெற்ற வருவாய் 16% அதிகரித்தது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று மூன்றாம் அலை சூழலிலும், சா்வதேச அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையிலும் தொழில் துறைத் தேவை சாதகமாக இருந்தது. செலவுக் குறைப்பு, திறன் மேம்பாடு போன்றவற்றால் ரானே குழும நிறுவனங்கள் பணவீக்கம் உள்ளிட்ட இடா்ப்பாடுகளைக் கடந்து வந்தன என்று ரானே ஹோல்டிங்ஸ் தலைவா் எல்.கணேஷ் தெரிவித்தாா்.