கோப்புப் படம் 
வணிகம்

டிஜிட்டல் ரூபாய்: முதல் நாளில் ரூ.275 கோடிக்கு வணிகம்!

இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட  எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) ரூ.275 கோடிக்கு வணிகமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

DIN


இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட  எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) ரூ.275 கோடிக்கு வணிகமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) திட்டம் சோதனை அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இன்று (நவ.1) அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே ரூ.275 கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ம ரூபாயைப் பயன்படுத்தி எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிளும் பரிவர்த்தணைகளை மேற்கொண்டன.

எண்ம ரூபாய் வரவு வைக்கப்பட்டு அதன் மூலம் கடன் பத்திரங்களை வாங்க வங்கிகள் தொகையை செலுத்தின. 

தனியாரால் நிா்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆா்பிஐ சாா்பில் எண்ம ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT