சந்தியா தேவநாதன் (கோப்புப் படம்) 
வணிகம்

மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன்!

முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சந்தியா தேவநாதன், தற்போது மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்படவுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அவர் பொறுப்பேற்பார் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
முகநூல், வாட்ஸ்ஆப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவராக இருந்த அஜித் மோகன் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

அதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் தற்போது இந்தியப் பிரிவுக்கு தலைவரை நியமித்துள்ளது. அதன்படி, முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சந்தியா தேவநாதன், தற்போது மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 2023ஆம் ஆண்டு 1ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார். 

இந்த தகவலை மெட்டா நிறுவனத்தின் வணிகப் பிரிவு அலுவலர் மரேன் லிவின் உறுதிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT