வணிகம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் அறிமுகம்!

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் முன்னோடி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அதன் பிரபலமான மோட்டார் சைக்கிளான அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி-ன் புதிய மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.

DIN


சென்னை: இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் முன்னோடி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அதன் பிரபலமான மோட்டார் சைக்கிளான அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி-ன் புதிய மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.

முத்து வெள்ளை நிறத்தில் வெளியான 2023 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்-ஷோரூம் (தில்லி) விலை ரூ. 1.30 லட்சம் என தெரிவித்துள்ளது.

முத்து வெள்ளை நிறம் கொண்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி வாகனத்தில் புதிய இருக்கை முறை மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர், பின்பக்க ரேடியல் டயர் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளானது 159.7சிசி, ஆயில்-கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் இன்ஜின் மற்றும் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷனில் 'லைட்வெயிட் புல்பப் மப்ளர்' உடன் வருவதால் வண்டியின் உமிழ் திறன் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்று டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தலைமை-வணிகம் அதிகாரி விமல் சும்ப்லி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT