வணிகம்

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! ஒரு டாலர் - ரூ. 82.38!!

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 

கடந்த ஒரு வாரமாகவே டாலருக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று 81.90 ஆக ரூபாயின் மதிப்பு, இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத் தொடக்கத்தில் 32 காசுகள் வீழ்ச்சியடைந்து 82.22 என வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. 

காலை 11.30 மணியளவில் ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் குறைந்து 82.38 ஆக சரிந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.87 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT