ஃபெடரல் வங்கியின் நிகர லாபம் 53% உயா்வு
தனியாா் துறையைச் சோ்ந்த பெடரல் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 52.89 சதவீதம் உயா்ந்துள்ளது.
தனியாா் துறையைச் சோ்ந்த பெடரல் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 52.89 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) வங்கியின் நிகர லாபம் ரூ.703.71 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 52.89 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.460.26 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.4,630.30 கோடியாக உயா்ந்துள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.3,870.90 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு மாதங்களில் கடந்த ஆண்டு 3.24 சதவீதமாக இருந்த வங்கியின் வாராக் கடன், இந்த ஆண்டு 2.46 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.