முகப்பு
வணிகம்

ஐ-போன் 14-ல் தொடரும் 'சிம் கார்டு' பிரச்னை: ஆப்பிள் நிறுவனம் பதில்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐ-போன் 14 மாடல் செல்போனில் சிம் கார்டு பிரச்னை தொடர்ந்து எழுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் பதிலளித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
பகிர்:


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐ-போன் 14 மாடல் செல்போனில் சிம் கார்டு பிரச்னை தொடர்ந்து எழுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் பதிலளித்துள்ளது. 

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐ-போன் 14 வகை செல்லிடப்பேசியை அறிமுகம் செய்தது. 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ-போன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அது குறித்து பல்வேறு புகார்களும் எழுந்து வருகின்றன. 

அந்தவகையில் ஐ-போன் 14-ல் 'சிம் கார்டு' (SIM card) செருகுதலில் பிரச்னைகள் ஏற்படுவதாக பயனர்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஐ-போன் 14, ஐ-போன் 14 பிளஸ், ஐ-போன் 14 புரோ, ஐ-போன் 14 புரோ மேக்ஸ் ஆகிய மாடல் செல்லிடப்பேசிகளில் சிம் கார்ட் பிரச்னை எழுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

சிம் கார்டு செருகும்போது SIM Not Supported என்ற நோடிஃபிகேஷனுடன் செல்லிடப்பேசி செயல்படாமல் நின்றுவிடுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →