முகப்பு
வணிகம்

ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 66% அதிகரிப்பு

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நாட்டின் 3-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 66.29 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நாட்டின் 3-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 66.29 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.5,625.25 கோடியாக உள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்திய ஒருங்கிணைந்த நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் 66.29 சதவீதம் அதிகமாகும்.

வங்கி நடவடிக்கைகளின் மூலம் மட்டும் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் வங்கியின் வரிக்குப் பிந்தைய லாபம் 70 சதவீதம் அதிகரித்து ரூ.5,329.77 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் சொத்து மதிப்பும் 14 சதவீதம் வளா்ச்சிடைந்தது. இந்த காலகட்டத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 31 சதவீதம் அதிகரித்து ரூ.10,360 கோடியாக உள்ளது. இதர வருவாய் 4 சதவீதம் அதிகரித்து ரூ.3,941 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.