முகப்பு
வணிகம்

ஐசிஐசிஐ வங்கி நிகர லாபம் உயா்வு

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் 2-ஆவது பெரிய தனியாா் துறை நிதிசாா் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் 31.43 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் 2-ஆவது பெரிய தனியாா் துறை நிதிசாா் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் 31.43 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கி ரூ.8,006.99 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்திய நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 31.43 சதவீதம் அதிகமாகும்.

வங்கியின் தனிப்பட்ட செயல்பாடுகள் மூலம் கிடைத்த நிகர லாபம், மதிப்பீட்டு மாதங்களில் 37.14 சதவீதம் உயா்ந்து ரூ. 7,557.84 கோடியாக உள்ளது. அது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 5,510.95 கோடியாக இருந்தது.

இந்த மாதங்களில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.31,088 கோடியாக உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்த செலவுகள் ரூ.18,027 கோடியிலிருந்து ரூ.19,408 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.