வணிகம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் அதிகரிப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியின் இரண்டாம் காலாண்டு முடிவில் அதன் நிகர லாபம் 37 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.262 கோடியாக உயர்ந்து. 

DIN


புதுதில்லி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 37 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.262 கோடியாக உயர்ந்து. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ.191 கோடியாக இருந்தது.

கடந்த மாதம் பங்குச்சந்தைகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகள் பட்டியலிடப்பட்ட பிறகு வந்த முதல் காலாண்டு முடிவுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் காலாண்டு மொத்த வருவாய் ரூ.1,101 கோடியிலிருந்து ரூ.1,141 கோடியாக உயர்ந்துள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.950 கோடியாக இருந்த வட்டி வருமானம் இந்த காலாண்டில் ரூ.997 கோடியாக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 2022 இறுதியில் வங்கியின் மொத்த வணிகம் 7.43 சதவீத வளர்ச்சியுடன் ரூ.78,013 கோடியாக இருந்தது. அதே வேளையில், மும்பை பங்குச் சந்தையில் வங்கியின் பங்குகள் 6.21 சதவீதம் உயர்ந்து ரூ.518-ஆக முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT