முகப்பு
வணிகம்

ராணே ஹோல்டிங்ஸ் லாபம் 41% அதிகரிப்பு

உதிரிபாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரானே குழுமத்தின் அங்கமான ரானே ஹோல்டிங்ஸ் லிமிடெட், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனது வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தில் 41.2 சதவீதம் வளா்ச்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

வாகன உதிரிபாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரானே குழுமத்தின் அங்கமான ரானே ஹோல்டிங்ஸ் லிமிடெட், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனது வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தில் 41.2 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.23.3 கோடியாக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 41.2 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.16.5 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் கடந்த ஆண்டு ரூ.697.3 கோடியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அது இந்த நிதியாண்டின் இதே மாதங்களில் ரூ.883.8 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.43.9 கோடியாக உயா்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.37.3 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.