வணிகம்

என்டிபிசி: 2-ம் காலாண்டின் நிகர மதிப்பு 7 சதவிகிதமாகக் குறைவு

DIN

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தினுடைய ஒருங்கிணைந்த நிகர லாபம் 7 சதவிகிதம் சரிந்து ரூ. 3,417.67 கோடியாக உள்ளதாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

இதுவே கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 3,690.95 கோடியாக இருந்ததாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த வருவாய் ரூ.33,095.67 கோடியிலிருந்து ரூ. 44,681.50 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, மொத்த செலவுகள் ரூ. 28,949.53 கோடியிலிருந்து ரூ. 40,000.99 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் நிறுவனத்தின் சராசரி மின் கட்டணம் யூனிட்டுக்கு ஒன்றுக்கு ரூ.4.77 ஆக இருந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் யூனிட்டுக்கு ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ. 3.86 ஆக இருந்தது.

நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களின் பயன்பாடு இரண்டாம் காலாண்டில் 69.29 சதவிகிதத்திலிருந்து 74.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விநியோகம் 0.42 எம்எம்டியிலிருந்து 5.58 எம்எம்டி ஆக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு நிலக்கரி விநியோகம் 44.83 எம்எம்டியிலிருந்து 48.72 எம்எம்டி ஆக அதிகரித்துள்ளது என என்டிபிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT