முகப்பு
வணிகம்

ஏர்டெல் பங்குகள் உயர்வு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை சரிவுடன் நிறைவடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
கோப்புப் படம்
பகிர்:


பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை சரிவுடன் நிறைவடைந்தன. திங்கள் கிழமையான நேற்று வணிகம் ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று சரிவைச் சந்தித்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48.99  புள்ளிகள் சரிந்து 59,196.99 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.083 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.20 புள்ளிகள் சரிந்து 17,655.60 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.058 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதில் அதிகபட்சமாக தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் 2.79 சதவிகிதம் உயர்வு கண்டது. இதற்கு அடுத்தபடியாக என்டிபிசி நிறுவன பங்குகள் 2.56 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 1.54 சதவிகிதமும், ரிலையன்ஸ் 0.98 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

இதேபோன்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.31 புள்ளிகள் எதிர்மறையாக சரிந்து மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →