வணிகம்

200 பொறியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியது 'ஓலா' நிறுவனம்

DIN

வாகன சேவையை வழங்கி வரும் ஓலா நிறுவனம், 200 பொறியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓலா நிறுவனம் பொதுமக்களுக்கு வாகன சேவையை வழங்கி வருகிறது. 

ஓலா செயலியைப் பயன்படுத்தி ஆட்டோ, கார் போன்ற வாகனங்களின் மூலம் வீட்டின் அருகில் இருந்தவாறு பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்குச் சென்று பயன்பெற்று வருகின்றனர். 

இந்த நிறுவனத்தின் மென்பொருள் பிரிவில் பணிபுரிந்த 200 பொறியாளர்களை ஓலா நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. முன்னதாக 500 பொறியாளர்களைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என ஓலா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. எனினும் முதல் கட்டமாக 200 பொறியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. 

அதிக எண்ணிக்கையிலான பணி நீக்கத்தைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT