வணிகம்

2017-22-ல் அதிக செல்வங்களைச் சேர்த்தவர்கள் அம்பானி, அதானி!

DIN

2017 - 2022ஆம் ஆண்டில் அதிக செல்வங்களை சேர்த்தவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியும், அதானி குழுமத்தின் கெளதம் அதானியும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கடந்த 16 ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 9 முறை அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதுவும் இறுதியாக தொடர்ந்து நான்கு முறை முதலிடத்தில் நீடித்து வருகிறார். 

இணையவழி பங்கு வணிக மற்றும் முதலீட்டு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் அளித்த தரவுகளின்படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. 

மோதிலால் ஓஸ்வால் நிறுவனம், அதிக அளவு செல்வங்களை சேர்த்தவர்களின் பட்டியலை ஆண்டிறுதிதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வுக்கு இறுதி 5 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

அந்தவகையில் 2017 - 2022 வரையிலான 5 ஆண்டில் அதிக அளவில் செல்வங்களை சேர்த்தவர்களின் பட்டியலில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் முதல் 100 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களால் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ரூ.92.2 லட்சம் கோடி சொத்துக்களில் ரூ.13.02 லட்சம் கோடி அம்பானியுடையது.

கடந்த 16 முறை நடத்தப்பட்ட 5 ஆண்டுகளுக்கான ஆய்வில் 9வது முறையாக அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அதுவும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். 

கடந்த சில முறையிலான ஆய்வில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்கள் முதல் அடுத்தடுத்த 5 இடங்களில் நீடித்து வந்தன.

அதிக நிலைத்தன்மையுடன் செல்வம் சேர்த்தவர்கள் பட்டியலில் கெளதம் அதானி குழுமம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று அதிவேகமாக செல்வங்களை உருவாக்குபவர்கள் பட்டியலில் அதானி 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

கடந்த 5 ஆண்டுகளில் மும்பை பங்குச்சந்தை வணிகத்தில் அதானி குழுமம் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமும் (சிஏஜிஆர்) 97 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

மோதிலால் ஓஸ்வால் நிறுவனத் தரவு அட்டவணை

இவர்களுக்கு அடுத்தபடியாக நிலைத்தன்மையுடைய செல்வம் சேர்த்தவர்கள் பட்டியலில் அல்கைல் அமினிஸ், கோஃபோர்ஜ், மைன்ட்டிரீ மற்றும் எல் & டி நிறுவனங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. 

அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் அதி வேகமாக செல்வங்களை உருவாக்கிய நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதனுடைய கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 106 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. 

அதிவேகமாக செல்வங்களை உருவாக்கிய நிறுவனங்களின் பிரிவில் டன்லா பிளாட்ஃபார்ம், அதானி என்டர்பிரைசஸ், பிரைட்காம் குரூப் மற்றும் டாடா டேல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் -பிரதமர் மோடி

சன் ரைசர்ஸ் மீண்டும் புதிய சாதனை: ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT