வணிகம்

இன்ஃபோசிஸ்: 4வது காலாண்டு முடிவு வெளியானது

இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 4வது காலாண்டு முடிவுகள் வெளியாகி 15 சதவீதம் சரிந்ததால், தேசிய பங்குச் சந்தையில் இன்போசிஸ் பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையான 1,185.30 ரூபாயைத் தொட்டது.

DIN

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது 15 சதவீதம் சரிந்ததால், தேசிய பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையான 1,185.30 ரூபாயைத் தொட்டது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், 4வது காலாண்டின் அறிக்கை வெளியாகி எதிர்மறை வினைகளை பங்குச் சந்தையில் ஆற்றி வருகின்ற நிலையில்,  அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8% வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ.6,128 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் செயல்பாடுகளின் வருவாய் 16% உயர்ந்து ரூ.37,441 கோடியாக உள்ளது.

இன்ஃபோசிஸின் 2023 ஜனவரி-மார்ச் காலாண்டு முடிவுகள் அதிர்ச்சியூட்டும் என்று கூறப்பட்டாலும், ஜெப்ரீஸ் நிறுவனமானது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT