வணிகம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரிப்பு!

மாருதி சுசூகி இந்தியா நிறுவனமானது ஜூலை மாதத்தில் அதன் மொத்த விற்பனை 3 சதவீதம் அதிகரித்து 1,81,630 யூனிட்டுகளாக உள்ளது என தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி:  மாருதி சுசூகி இந்தியா நிறுவனமானது ஜூலை மாதத்தில் அதன் மொத்த விற்பனை 3 சதவிகிதம் அதிகரித்து 1,81,630 யூனிட்டுகளாக உள்ளது என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 1,75,916 வாகனங்களை டீலர்களுக்கு அனுப்பி வைத்தோம். அதே வேளையில் மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையானது 1,42,850-லிருந்து 6 சதவிகிதம் அதிகரித்து 1,52,126-ஆக உள்ளது.

ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட மினி செக்மென்ட் கார்களின் விற்பனை ஜூலை 2022-ல் 20,333-ல் இருந்து 9,590-ஆக குறைந்துள்ளது.

பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ் மற்றும் ஸ்விஃப்ட் உள்ளிட்ட காம்பேக்ட் கார்களின் விற்பனையும் 21 சதவிகிதம் குறைந்து 84,818-ல் இருந்து 67,102-ஆக விற்பனையானது.

பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி மற்றும் எக்ஸ்எல்-6 ஆகியவற்றை உள்ளடக்கிய பயன்பாட்டு வாகனங்கள் கடந்த மாதம் 62,049 யூனிட்டுகளை விற்பனையானது. இது ஜூலை 2022-ல் அனுப்பப்பட்ட 23,272 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த மாதம் 22,199 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT