வணிகம்

சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்வு!!

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சற்று சரிவைக் கண்ட நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

DIN

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சற்று சரிவைக் கண்ட நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை 64,948.66 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 64,852.70 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

இன்று காலை 11.55 நிலவரப்படி சென்செக்ஸ் 257.67 புள்ளிகள் அதிகரித்து 65,206.33 புள்ளிகளில் வர்த்தகம் பெற்று வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 70.60 புள்ளிகள் உயர்ந்து 19,380.75 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், பவர் கிரிட், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட  உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 

எம் & எம், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT