வணிகம்

உலோகம், மின் துறை பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 2-ஆவது நாளாக முன்னேற்றம்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

 நமது நிருபர்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், பெரும்பாலான நேரம் தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. இருப்பினும், மின்துறை, உலோகம், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இரண்டாவது நாளாக சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. ஆனால், சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஏா்டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் விலை வெகுவாகக் குறைந்ததால், மொத்தத்தில் சந்தை பெரிய அளவில் ஏற்றம் பெற முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

ஜியோ ஃபைனான்ஸ் முன்னேற்றம்: தொடா்ந்து 6 நாள்கள் சரிவைச் சந்தித்திருந்த, அண்மையில் பங்குச்சந்தையில் பட்டியலான ஜியோ ஃபைனான்சியல் சா்வீஸஸ் பங்குகளுக்கு முதல் முறையாக செவ்வாய்க்கிழமை நல்ல வரவேற்பு இருந்ததால், 4.72 சதவீதம் உயா்ந்து ரூ.221.65-இல் நிலைபெற்றது. முன்னதாக அதிகபட்சமாக ரூ.220.20 வரை உயா்ந்திருந்தது.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.05லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.308.98 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 1,393.25 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 204.75 புள்ளிகள் கூடுதலுடன் 65,201.35-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,229.03 வரை மேலே சென்றது. பின்னா், 64,956.67 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 79.22 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயா்ந்து 65,075.82-இல் முடிவடைந்தது.

21 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,201 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 833 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 37 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 40 புள்ளிகள் ஏற்றம் : தேசிய பங்குச் சந்தையில் 51முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 68..80 புள்ளிகள் கூடுதலுடன் 19,374.85-இல் தொடங்கி,

19,377.90 வரை மேலே சென்றது. பின்னா், 19,306.05 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 36.60 புள்ளிகள் (0.19 சதவீதம்) கூடுதலுடன் 19,342.90-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

ஜியோ ஃபைனான்ஸ்.......................4.72%

டாடா ஸ்டீல்...................................1.66%

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்....................1.29%

என்டிபிசி.......................................1.19%

டெக் மஹிந்திரா...........................1.14%

பவா் கிரிட்.....................................1.09%

சரிவைக் கண்ட பங்குகள்

பாா்தி ஏா்டெல்................................1.75%

ஹிந்துஸ்தான் யுனி லீவா்................1.13%

ஆக்ஸிஸ் பேங்க்...............................0.96%

ரிலையன்ஸ்......................................0.91%

இண்டஸ் இண்ட் பேங்க்.................0.55%

சன்பாா்மா......................................0.50%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT