வணிகம்

தவறான தகவல்: கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம்!

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN


மாஸ்கோ: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரஷியாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்பபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
        
2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப்  பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷியா முரண்பட்டுள்ளது

ரஷியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனத்துக்கு ரஷிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ரஷியா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. 

கூகுளின் இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரசாரம் என ரஷியா விமர்சித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போரை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷிய அரசு குறிப்பிட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT