வணிகம்

இந்திய பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்!

DIN


இந்திய பங்குச்சந்தை வணிகம் நேற்று ஏறுமுகத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 200 புள்ளிகளும் நிஃப்டியும் சரிவுடன் தொடங்கின. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191.79   புள்ளிகள் சர்ந்து 60,595.76 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.33 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47.65 புள்ளிகள் சரிந்து 17,845.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.39 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 22 நிறுவனங்களில் பங்குகள் சரிவுடன் இருந்தன. 

அதிகபட்சமாக எச்சிஎல் நிறுவன பங்குகள் 2.09 சதவிகிதம் சரிவடைந்தது. அதற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல் 1.66 சதவிகிதமும், ரிலையன்ஸ் 1.13 சதவிகிதமும், விப்ரோ 0.89 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் 0.78 சதவிகிதமும் சரிவைந்திருந்தன. 

அதிகபட்சமாக பாஜான் பின்சர்வ் நிறுவனப் பங்குகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, எம் & எம், எல் & டி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்திருந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT