அதானி குழும பங்குகள் வீழ்ச்சியால் வருவாய் வளர்ச்சி இலக்கு பாதியாகக் குறைப்பு
அதானி குழு நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைவது தொடர்கதையாகிவிட்ட நிலையில் அக்குழுமத்தின் வருவாய் வளர்ச்சி இலக்கு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: அதானி குழு நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைவது தொடர்கதையாகிவிட்ட நிலையில் அக்குழுமத்தின் வருவாய் வளர்ச்சி இலக்கு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதுபோல, புதிய மூலதனச் செலவுத் திட்டத்தையும் அதானி குழுமம் ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிக்க.. நோய்க்கு மருந்தாக மாறிய பழைய சோறு.. ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த தகவல்
அதானி க்ரீன் எனர்ஜி லிமிடட், அதானி டோட்டல் காஸ் லிமிடட், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிட்டட் ஆகியவை 5 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி என்டர்பிரைசஸ் ஏற்றத்தாழ்வில் உள்ளன.
இதையும் படிக்க.. பத்து வழிச் சாலையில் இந்தா ஆறு இங்க இருக்கு.. மிச்சம் நான்கு எங்கே?
இந்த நிலையில், அதானி குழுமம் தற்போது தனது வருவாய் வளர்ச்சி இலக்கை அடுத்த ஆண்டு 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் என்ற அளவில் மாற்றியமைத்துள்ளது. இது கடந்த முறை 40 சதவிகிதம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.