வணிகம்

'தார்' மாடலில் புதிய வாகனம்! அறிமுகம் செய்தது மஹிந்திரா!

மஹிந்திரா & மஹிந்திரா இன்று (ஜனவரி 09) திங்கள்கிழமையன்று அதன் பிரபலமான மாடலான 'தார்' ஸ்போர்ட்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

DIN

மஹிந்திரா & மஹிந்திரா இன்று (ஜனவரி 09) திங்கள்கிழமையன்று அதன் பிரபலமான மாடலான தார் ஸ்போர்ட்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

புதிய மாடலானது ரியர் வீல் டிரைவ் திறனுடன் வருகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு  விற்பனைக்கு வருகிறது என்று மஹிந்திரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டீசலில் இயங்கும் மேனுவல் ரியர் வீல் டிரைவ் வண்டியின் விலையானது ரூ.9.99 லட்சம் முதல்  ரூ.10.99 லட்சம் வரை இருக்கும்.  அதே வேளையில் பெட்ரோலில் இயங்கும்  ஆட்டோமேட்டிக் வெர்ஷன் விலையானது ரூ.13.49 லட்சம் ஆகும்.

மஹிந்திரா தார் தனது 4-வீல் டிரைவ் வகைகளில் தற்போது எலெக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குரலுக்கு தொடர்ந்து செவிசாய்த்து வருகிறோம். பல முக்கிய மேம்பாடுகளுடன் 'தார்' மாடலை வடிவமைத்துள்ளோம் என்றார் மஹிந்திரா & மஹிந்திராவின் வாகனப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT