வணிகம்

ஐ-போன் உற்பத்தி ஆலையை வாங்குகிறது டாடா நிறுவனம்!

DIN

இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக செய்தி நிறுவனமான புளூம்பர்க் அளித்துள்ள தகவலின்படி, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவடையும். ஐ-போன் உற்பத்தி செய்யும் இந்தியாவிலேயே செய்யும் முதல் நிறுவனமாக விஸ்ட்ரான் உள்ளது. விஸ்ட்ரான் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர்கள் (ரூ.4,920 கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது. 

விஸ்ட்ரான் நிறுவனம் தாய்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஐ-போன் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கினால், ஐ-போனை இந்தியாவில் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT