வணிகம்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியுடன் தொழில் வாய்ப்பு: உதயமாகிறது மில்லட் ஹெல்த்கஃபே

DIN

சர்வதேச சிறுதானிய ஆண்டை கொண்டாடும் வகையில் நமது பெருமைக்குரிய இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகளால் ஏற்கப்பட்டு ஐ.நா அமைப்பால் உலக சிறுதானிய ஆண்டாக 2023ஐ அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாயிரம் வருடங்கள் பழமையான சிறுதானிய உணவு வகைகளை ஏறக்குறைய 50  ஆண்டுகளாக மறந்துபோன சிறுதானிய உணவு வகைகளை மக்களுக்கு புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் உள்ளிட்ட சத்துகளாக மக்களின் அன்றாட உணவு பழக்கத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் நமது பாரத பிரதமரால் முன்னெடுக்கப்படுகிறது. 

ஏனெனில் சிறுதானிய வகைகள் அனைத்து தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் மிகக்குறைந்த காலத்தில் குறைந்த தண்ணீரில் மலைப் பிரதேசங்களிலும் மானாவாரி நிலங்களிலும் உற்பத்தி செய்ய ஏதுவானது. இதில் முக்கிய சாராம்சமான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை முற்றிலும் அகற்ற ஆரோக்கியமான வருங்கால சந்ததிகளான மழலை செல்வங்களை உருவாக்க உதவுகிறது.

இவ்வகையான சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மில்லட் ஹெல்த்கஃபே என்ற பெயரில் அனைத்து வகையான டி மற்றும் காபி, சிறுதானிய சூப் உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகள் இட்லி, தோசை, பொங்கல், சிறுதானிய புட்டு, பிஸ்கட், பிரட், கேக், நூடுல்ஸ், இனிப்பு, காரவகைகள் மற்றும் முக்கியமான சிறுதானிய மதிய உணவு அறிமுகப்படுத்த உள்ளது. 

தமிழகத்தில் துவங்கப்பட்டு இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய பிரஷ் மற்றும் டெண்டர் ரீடைல் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தமிழகத்தின் மிகப்பெரிய பெண் விவசாய உறுப்பினர்களை நிர்வகித்து வரும் அக்ரோ டெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் இந்தியன் மில்லட் மூவ்மெண்ட் முனைப்புடன் செயல்பட உள்ளது.

மில்லட் ஹெல்த் கஃபே முழுக்க முழுக்க பெண்கள் குழுக்களால் நிர்வகிக்கப்பட உள்ளது இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க உள்ளது.

இதுபோன்ற உன்னத சிறுதானிய வகைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்கும் பெண் தொழில் முனைவோர்களிடமிருந்து தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தால் பயன்படும் நபர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் PMFME /NEEDS /PMEGP /UYEGP போன்ற கடன்பெரும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து கடன் பெற்றுதரவும், உதவி செய்துதரப்பட மட்டுமல்லாமல் உணவுப் பொருள்களின் உற்பத்திகளை தகுந்த பயிற்சி மற்றும் சான்றுபெற்று தருவது உற்பத்தி செய்த பொருள்களை வியாபாரம் செய்யவும் உதவி புரிகிறது.

இத்திட்டத்தில் தனிநபர் மற்றும் 6 பேர் கொண்ட கூட்டுக்குழுவாகவும் விண்ணப்பித்து முழுக்கடை உரிமையாளராக மட்டுமல்லாமல் லாபமும் பயனடையலாம்.

சொந்த நிலம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து சிறுதானியங்களை பயிரிட பயிற்சி பெற்று பயன்பெறலாம்!

இதுபோன்ற உன்னத சேவையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயம்சாரா விவசாயத்தில் ஆர்வம் உடைய நபர்களும் இத்திட்டத்தில் பங்குதாரராகவும் பயன்பெறும் வகையில் அமைக்க பெற்றுள்ளது.

மேலும், விவரங்களுக்கு நிறுவனத்தின் விவசாய மேலாளரை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம் - 6382613875.

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க சிறுதானிய உணவுகளை உட்கொள்வோம்.

பொறுப்புத் துறப்பு: இந்த உள்ளடக்கம் அக்ரோ டெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் இந்தியன் மில்லட் மூவ்மெண்ட் ஆல் விநியோகிக்கப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தில் எந்தவொரு தினமணி பத்திரிகையாளரும் ஈடுபடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT