வணிகம்

ஐடிபிஐ வங்கியின் நிகர லாபம் 60 சதவீதம் உயர்வு

DIN

புது தில்லி: அரசுக்குச் சொந்தமான ஐடிபிஐ வங்கி, 2022 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த  ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டு நிதி வருவாய் 60 சதவீதம் உயர்ந்து அதன் நிகர லாபம் ரூ.927 கோடியாக உயர்ந்துள்ளது.

இப்போதைய நிலையில் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் மத்திய அரசு மற்றும் எல்ஐசி இடம் பெரும்பான்மையாக உள்ளது. அதை விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என தெரியவந்துள்ளது. அதே வேளையில் 2021 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஐடிபிஐ வங்கி ரூ.578 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் நிகர வட்டி வருமானம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.2,925 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.2,383 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.939 கோடியாக இருந்த வங்கியின் செயல்படாத சொத்துகளின் விகிதம் தற்போது டிசம்பர் காலாண்டில் ரூ.233 கோடியாக குறைந்துள்ளது.

இந்நியைில் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 0.73 சதவீதம் உயர்ந்து ரூ.55க்கு வர்த்தகம் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT