வணிகம்

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

DIN

பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

நேற்று(புதன்கிழமை) 65,446 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

காலை 11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 234.93 புள்ளிகள் அதிகரித்து 65,680.97 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 64.75 புள்ளிகள் உயர்ந்து 19,463.25 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

ரிலையன்ஸ், எம் & எம், பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 

ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ஹின்டால்கோ, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை இறக்கம் கண்டு வருகிறது. 

தொடர்ந்து, சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,000 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகமாகி சாதனை படைத்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT