வணிகம்

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் லாபம் 60 சதவீதம் உயர்வு!

DIN

புதுதில்லி:  உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில், 60 சதவீதம் அதிகரித்து ரூ.324 கோடி உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ.203 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.1,030 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,464 கோடியானது. அதே வேளையில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.905 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,287 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர வட்டி வருமானம் 32 சதவிகிதம் அதிகரித்து ரூ.793 கோடியாக உள்ளது என்று உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியின் மொத்த வாராக் கடன் 2023 ஜூன் மாதத்திற்குள் மொத்த முன்பணத்தில் 6.51 சதவீதத்திலிருந்து 2.62 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் அதே வேளையில் 0.11 சதவீதத்திலிருந்து 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT