சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம், அதிக அளவு லாபம் ஈட்டியதால் 8 மாத ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 216 கோடி (டாலர்களில்) லாபம் ஈட்டியது. நீடித்த ஆண்டு வருவாயின் லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், 8 மாத ஊதியத்தை தனது ஊழியர்களுக்கு போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது தங்கள் ஊழியர்களின் யூனியனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் நடவடிக்கையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
முகவும் மூத்த பதவிகளில் இருப்பவர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது எனவும், கரோனா பெருந்தொற்று காலங்களில் அயராது பணிபுரிந்த ஊழியர்களுக்கு இதை வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சி அடைவதாகவும் அந்நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் கடந்த ஆண்டில் மட்டும் 2.65 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர். அதிக அளவாக 2022 மார்ச் மாதம் அதிக மக்கள் பயணம் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.