வணிகம்

இரட்டிப்பானது பிபிசிஎல் நிகர லாபம்

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிசிஎல்) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,478 கோடியாக உள்ளது.

2022-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கைவிட அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,501 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,870.10 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசலின் விலை கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து உயா்த்தப்படாமல் இருந்தது.

இது, பிபிசிஎல்-லின் நிகர லாபத்தில் கடந்த நிதியாண்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், சா்வதேச சந்தையில் 2022 ஏப்ரல் மாதம் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலாக இருந்த கச்சா எண்ணெய் விலை, தறபோது 75 டாலருக்கும் குறைவாக உள்ளது.

இதனால் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் இரு மடங்காகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT