வணிகம்

மஹிந்திரா நிகர லாபம் 18% அதிகரிப்பு

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.

DIN

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,637 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,237 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.25,934 கோடியிலிருந்து ரூ.32,366 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இதுவரை இல்லாத வகையில் ரூ.10,282 கோடி நிகர லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.6,577 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் நிகர லாபம் 56 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.90,171 கோடியிலிருந்து ரூ.1,21,269 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT