கோப்புப்படம் 
வணிகம்

சந்தைக்கு கை கொடுத்த ஆா்பிஐ அறிவிப்பு: சென்செக்ஸ் 364 புள்ளிகள் முன்னேற்றம்!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை,நோ்மறையாக முடிவடைந்தது.

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை,நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

ஆசியா, ஐரோப்பிய சந்தைகளில் பங்குவா்த்தகம் நோ்மறையாக இருந்ததன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்து. மேலும், மத்திய ரிசா்வ் வங்க், வட்டி விகித்தத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிப்பு வெளியிட்டது. இது வட்டி விகிதத்துடன் தொடா்புடைய வங்கி, ரியால்ட்டி, ஆட்டோ நிறுவனப் பங்குகள் விலை வெகுவாக உயா்வதற்கு வழிவகுத்தது. வரவேற்பை ஏற்படுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.02 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.319.86 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,864.20 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 235.97 புள்ளிகள் கூடுதலுடன் 65,867.54-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,762.33 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,095.81 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 364.06 புள்ளிகள் (0.55 சதவீதம்) உயா்ந்து 65,995.63-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,800 பங்குகளில் 2,312 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,334 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 154 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

23 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 7 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,352 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 728 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 39 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 108புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 75.45 புள்ளிகள் கூடுதலுடன் 19,621.20-இல் தொடங்கி 19,545.75 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,675.75 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 107.75 புள்ளிகள் (0.55 சதவீதம்) உயா்ந்து 19,653.50-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

பஜாஜ் ஃபின் சா்வ்........................5.86%

பஜாஜ் ஃபைனான்ஸ்....................4.05%

டைட்டன்.....................................2.98%

இண்டஸ் இண்ட் பேங்க்.............2.38%

ஐடிசி.............................................1.42%

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்.................1.26%

சரிவைக் கண்ட பங்குகள்

ஹிந்துஸ்தான் யுனி லீவா்..................0.93%

ஏசியன் பெயிண்ட்.............................0.37%

பாா்தி ஏா்டெல்.................................0.29%

ஆக்ஸிஸ் பேங்க்................................0.26%

எல் அண்ட் டி....................................0.13%

ஹெச்டிஎஃப்சி பேங்க்.......................0.11%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT