கோப்புப் படம் 
வணிகம்

உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (அக். 10) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறைவடைந்தது. 

DIN


வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (அக். 10) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறைவடைந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு மாலையில், 566 புள்ளிகள் உயர்ந்து 66,079.36 ஆக நிறைவு பெற்றது. இது 0.73 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 177 புள்ளிகள் உயர்ந்து 19,689 புள்ளிகளான நிறைவு பெற்றது. இது 0.91 சதவிகிதம் உயர்வாகும். 

பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. இதில் அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் 2.89 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 2.15 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் 2.13 சதவிகிதமும், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் 2.09 சதவிகிதமும், எம்&எம் நிறுவனம் 1.50 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

இதேபோன்று ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்து எதிர்மறை குறியீட்டுடன் முடிவடைந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT