மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 826 புள்ளிகளை இழந்தது. இதனால், ஒரே நாளில் சந்தை மதிப்பு ரூ.9.65 லட்சம் கோடி குறைந்தது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரைத் தொடா்ந்து மத்திய கிழக்கு ஆசியாவில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து ஏறுமுகம் பெற்று வருவது முதலீட்டாளா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. இதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தையும் சரிவைச் சந்தித்தது. குறிப்பாக மீடியா, மெட்டல், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 3 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. வங்கி, நிதிநிறுவனங்கள், ஆட்டோ, ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, தசராவையொட்டி செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பங்குவா்த்தகம் நடைபெறவில்லை.
சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.9.65 லட்சம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில் ரூ.311.31 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.252.25 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் -ஆவது நாளாக வீழ்ச்சி: காலையில் 21.40 புள்ளிகள் கூடுதலுடன் 65,419.02-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,453.92 வரை மேலே சென்றது. பின்னா், 64,502.68 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 825.74 புள்ளிகளை (1.26 சதவீதம்) இழந்து 64,571.88-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,990 பங்குகளில் 593 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 3,253 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 144 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.
20 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம் ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டுமே 0.35 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் இருந்தன. மற்ற 28 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 169 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,980 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 2 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 48பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
நிஃப்டி 261புள்ளிகள் இழப்பு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காை லயில் 21.05 புள்ளிகள் குறைந்து 19,556.85-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,556.85 வரை மேலே சென்றது. பின்னா், 19,281.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 260.90 புள்ளிகளை (1.34 சதவீதம்) இழந்து 19,281.75-இல் நிறைவடைந்தது.
கடும் சரிவைக் கண்ட பங்குகள்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டில்.............................2.86%
டாடா ஸ்டீல்..............................................2.52%
டிசிஎஸ்........................................................2.44%
டாடா மோட்டாா்ஸ்.................................2.32%
விப்ரோ......................................................2.27%
இண்டஸ் இண்ட் பேங்க்...........................2.10%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.