முகப்பு
வணிகம்

இந்தியன் வங்கி நிகர லாபம் 62% உயா்வு

அரசுக்குச் சொந்தமான இந்தியன் வங்கியின் செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் 62 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

அரசுக்குச் சொந்தமான இந்தியன் வங்கியின் செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் 62 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,988 கோடியாக உள்ளது.

இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 62 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,225 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.10,710 கோடியிலிருந்து ரூ.13,743 கோடியாக அதிகரித்துள்ளது.

2022 செப்டம்பா் இறுதியில் 7.30 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் நடப்பாண்டின் அதே மாத இறுதியில் 4.97 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →