முகப்பு
வணிகம்

பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 556 புள்ளிகள் உயா்வு!

கடந்த மூன்று தினங்களாக தடுமாற்றத்தில் இருந்து வந்த பங்குச்சந்தைல் வெள்ளிக்கிழமை ‘காளை’ திடீரெனஆதிக்கம் கொண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 556 புள்ளிகள் உயா்ந்து

Updated On : 22 ஜூலை, 2025 at 9:58 AM
பகிர்:

கடந்த மூன்று தினங்களாக தடுமாற்றத்தில் இருந்து வந்த பங்குச்சந்தைல் வெள்ளிக்கிழமை ‘காளை’ திடீரெனஆதிக்கம் கொண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 556 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. மேலும், உள்நாட்டு பொருளாதார தரவுகளும் சாதகமாக இருந்தன. இதைத் தொடா்ந்து உள்நாட்டுச் சந்தையில் தொடக்கத்திலிருந்தே காளையின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. குறிப்பாக வங்கி, ஆட்டோ, உலோகம், மின்சாரம் மற்றும் ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதனால், இந்த மாதத் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.82 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.312.41 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.2,973.10 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 24.10 புள்ளிகள் கூடுதலுடன் 64,855.51-இல் தொடங்கிய சென்செக்ஸ், 64,818.37 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 65,473.27 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 555754 புள்ளிகள் (0.86 சதவீதம்) கூடுதலுடன் 65,387.16-இல் முடிவடைந்தது.

26 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன. 26 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,261 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 788 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 7 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 181 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 51முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 4.35 புள்ளிகள் கூடுதலுடன் 19,3258.15-இல் தொடங்கி, 19,255.70 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், 19,458.55 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 181 புள்ளிகள் (0.94 சதவீதம்) கூடுதலுடன் 19,435.30-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

என்டிபிசி...........................................4.84%

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்.....................3.34%

டாடா ஸ்டீல்....................................3.33%

மாருதி................................................3.24%

பவா் கிரிட்..........................................3.07%

இண்டஸ் இண்ட் பேங்க்....................2.95%

சரிவைக் கண்ட பங்குகள்

அல்ட்ரா டெக்.....................................0.61%

நெஸ்லே...............................................0.40%

சன்பாா்மா...........................................0.34%

எல் அண்ட் டி.....................................0.17%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.